பரப்பளவு : 2132 சதுர கி.மீ.
மக்கள் தொகை : 671,195 (2001 மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி)
கடல் மட்டத்திலிருந்து 700லிருந்து 2100 மீ உயரம்.அழகிய மேற்குத் தொடர்ச்சி மலை மீது 2132 சதுர கி.மீ வரை உள்ள இடங்களில் பல்லுயிர் பெருக்கம் மிகுந்து காணப்படுவதால் கேரள மாவட்டங்களுள் தனது இயற்கை அழகை நிலைநிறுத்தி வைத்துள்ள மாநிலங்களுள் ஒன்றாக வயநாடு திகழ்கிறது. மலை உள்ள இந்தக் குன்றுப்பகுதிகளில் நாகரிகம் அடையாத ஆதிவாசியினர் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். கேரளாவிலுள்ள எடக்கல் மற்றும் அம்புகுத்தி மலை ஆகிய இடங்களின் மலை அடிவாரங்களிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட பழைமையான கல்வெட்டுகள் சரித்திரக் காலத்திற்கு முந்தைய மெசோலித்திக் கால கலாச்சாரத்தைக் கொண்டவையாக உள்ளன. மனதைக் கவரும் அழகுகளான துணை வெப்ப மண்டல சாவன்னா புல்வெளிகள், அழகிய மலைவாழிடங்கள், பரந்த நறுமணப் பொருட்களின் தோட்டங்கள், அடர்ந்த காடுகள் மற்றும் நல்ல பாரம்பரிய கலாச்சாரங்கள் ஆகியவற்றிற்குப் புகழ்பெற்ற இடமாக உள்ளது வயநாடு. அழகிய டெக்கான் பீடபூமியின் தென்முனையில் அமைந்துள்ளது.
- அருகிலுள்ள விமான நிலையம் : கோழிக்கோடு.
- அருகிலுள்ள இரயில் நிலையம் : கோழிக்கோடு
இந்த மாவட்டத்திலுள்ள முக்கிய டவுன்கள் மற்றும் அருகிலுள்ள இரயில் நிலையத்திலிருந்து அதன் தொலைவு.
- கல்பேட்டா : கோழிக்கோட்டிலிருந்து 72 கி.மீ. தொலைவு.
- மனந்தவாடி : தலச்சேரியிலிருந்து 80 கி.மீ. தொலைவு. கோழிக்கோட்டிலிருந்து 106 கி.மீ. தொலைவு.
- சுல்தான் பாத்தேரி : கோழிக்கோட்டிலிருந்து 97 கி.மீ. தொலைவு.
- வைத்திரி : கோழிக்கோட்டிலிருந்து 60 கி.மீ. தொலைவு.
சாலை : கோழிக்கோடு, கன்னூர், ஊட்டி, மைசூர் ஆகிய நகரங்களோடு சாலை வழி மூலம் இணைக்கப்பட்டுள்ளது. கல்பேட்டாவிலிருந்து ஊட்டி 175 கி.மீ தொலைவு. கல்பேட்டாவிலிருந்து மைசூர் 140 கி.மீ தொலைவு.
செம்பரா சிகரம்
கடல் மட்டத்திலிருந்து 2100 மீட்டர் உயரத்திலிருக்கும் செம்பரா சிகரம் வயநாட்டின் தென்பகுதியிலுள்ள மெப்பாடி அருகில் அமைந்துள்ளது. இது இந்தப் பகுதியில் அமைந்துள்ள மிக உயரமான சிகரம் ஆகும். இந்தச் சிகரத்தில் ஏறுவது ஒருவரின் உடல் தைரியத்திற்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும். செம்பரா சிகரத்தில் ஏறுவது ஒரு மகிழ்ச்சியான அனுபவமாகும். இந்த மடிப்பு மலையில் ஏறும்போது ஒவ்வொரு கட்டத்திலிருந்தும், நாம் வயநாட்டின் அமைப்பினைக் கண்டு மகிழலாம். உச்சிக்குச் சென்றடையும் போது வயநாட்டின் முழுகாட்சியும் நம் கண்முன் விரியும். சிகரத்தில் ஏறுவதற்கும், இறங்குவதற்கும் ஒரு நாள் முழுவதும் ஆகும். சிகரத்தின் உச்சியில் தங்குபவர்களுக்கு அது மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.
அங்கு தங்க விரும்புகிறவர்கள் வயநாட்டிலுள்ள கால்பேட்டா பகுதியில் அமைந்துள்ள மாவட்ட சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தை அணுகி அனுமதி பெற வேண்டும்.
நீலிமலை
வடநாட்டின் தென்கிழக்குப் பகுதியில் கல்பேட்டாவிற்கு அருகில் அமைந்துள்ளது நீலிமலை பார்க்கத்தக்கதும் மற்றும் சுல்தான் பாத்தேரியும் அமைந்த இடமாகும். நீலிமலை வெவ்வேறு மலையேறு வழிகளைக் கொண்டுள்ளதால் மலையேறுபவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் ஒரு இடமாகும். நீலிமலை உச்சியிலிருந்து மீன்முட்டி அருவிகள் மற்றும் அருகிலுள்ள பள்ளத்தாக்குகளைக் காண்பது சிலிர்ப்பூட்டும் காட்சிகளாகும்.
மீன்முட்டி
மீன்முட்டி அருவிகள் ஊட்டி வடநாடு சாலையை இணைக்கும் முக்கிய சாலை வழியாக 2 கி.மீ ஏறினால் நீலிமலைக்கு அருகிலுள்ள பார்க்கத்தகுந்த அழகிய மீன்முட்டி ஆரவியைச் சென்றடையலாம். இது வயநாட்டிலுள்ள மிகப்பெரிய அருவியாகும். 300 மீட்டர் உயரத்திலிருந்து மூன்று கட்டங்களாக நீர் வீழ்வது பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
சேத்தாலயம்.
வயநாட்டிலுள்ள இன்னுமொரு அழகிய அருவியான சேத்தாலயம் சுற்றுலாப் பயணிகளைக் கவருவதாக உள்ளது. இது வயநாட்டின் வட பகுதியிலுள்ள சுல்தான் பாத்தேரியின் அருகில் அமைந்துள்ளது. இது மீன்முட்டி அருவியோடு ஒப்பிடும்போது சிறிய அருவியே ஆகும். அருவியும் அதைச் சுற்றியுள்ள இடங்களும் மலை ஏறுபவர்களுக்கும் பறவைகளைப் பார்க்க விரும்புகிறவர்களுக்கும் ஏற்ற இடமாக இருக்கும்.
பக்ஷிப்பத்தாலம்
பக்ஷிப்பத்தாலம் கடல் மட்டத்திலிருந்து 1700 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பிரம்மகிரி குன்றுகளில் உள்ள அடர்ந்த காடுகளின் நடுவே அமைந்துள்ளது. இந்தப் பகுதி பாறைகளும் மிகப்பெரிய குன்றுகளும் நிறைந்தவையாக இருக்கும். இங்குள்ள மிகவும் ஆழமான குகைகள் பல்வேறு காட்டுப் பறவைகள், விலங்குகள் மற்றும் வெவ்வேறு வகையான தாவரங்கள் ஆகியவற்றின் வாழிடமாக உள்ளன. பக்ஷிப்பத்தாலம், மனந்தாவடியில் அமைந்துள்ளது. இப்பகுதிக்குச் செல்வதற்கு திருநெல்லியிருந்து 7 கி.மீ மேலே ஏறிச் செல்ல வேண்டியுள்ளது. பக்ஷிப்பத்தாலத்தைப் பார்க்க விரும்பும் சுற்றுலாப் பயணிகள் வடக்கு வயநாட்டிலுள்ள DFO விடம் அனுமதி பெற வேண்டும்.
பான்சுரா சாகர் அணை
பான்சுரா சாகர் அணை இந்தியாவின் மிகப்பெரிய அணை எனக் குறிப்பிடப்படுகிறது. இந்த அணை வயநாடு மாவட்டத்தில் தென்பகுதியில் காரலாடு ஏரிக்கு அருகில் அமைந்துள்ளது. பான்சுரா சாகர் அணைத் திட்டம் உள்ள இடம்தான் பான்சுரா சிகரத்திற்கு ஏறுவதற்கான தொடக்க இடமாக உள்ளது. இங்குள்ள பார்க்கத்தக்க முக்கிய அம்சங்கள், நீர்த்தேக்கங்களால் சூழப்பட்ட தீவு போன்ற பகுதிகளாகும்.
நீங்கள் வயநாட்டின் அருமையான காட்சிகளையும் பறவைகளின் ஒலிகளையும் மணத்தினையும் நுகர்ந்து கொண்டு செல்லும்போதெ இங்குள்ள நறுமணப் பொருட்கள், தேயிலை, காப்பி, மூங்கில் தயாரிப்புகள், தேன், மூலிகைச் செடிகள் போன்ற வயநாட்டுக்கே உரிய சிறப்புப் பொருட்களையும் நீங்கள் இங்கே வாங்க முடியும்.
No comments:
Post a Comment